பில்லா பாண்டி - திரை விமர்சனம்


தல ரசிகன் என்னும் அடையாளத்தோடு உள்ளூரில் அட்ராசிட்டி, அத்தை பெண்ணுடன் காதல் என மகிழ்ச்சியாய் நகரும் நாயகனின் வாழ்க்கை, மற்றொரு பெண்ணின் ஒருதலைக் காதலால் திசைமாற, தல ரசிகன் அதில் இருந்து எப்படி மீண்டான் என்பதே ‘பில்லா பாண்டி.'

கட்டுமஸ்தான உடல்வாகு, கறுத்த மேனி, காந்தக்கண்களுடன் வலம் வரும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பிலும், ஆக் ஷனிலும் தன்னை நிரூபித்திருக்கிறார். 
வில்லனான தான் பன்ச் டயலாக் பேசினால் எடுபடுமா என்ற சந்தேகத்தில் எந்த டயலாக் பேசினாலும் அதில் அஜித்தையும் சேர்த்துக்கொள்கிறார்.

அழகுப் பதுமையாக நாயகனை நினைத்து மனதுக்குள் உருகும் போதும், நினைவு இழந்து குழந்தையாக மாறுகையிலும் நிறைவான பங்களிப்பை வழங்கியுள்ளார் இந்துஜா. சாந்தினியும் பாத்திரத்துக்கு ஏற்ற பங்களிப்பை நேர்த்தியாய் வழங்கியுள்ளார். கிராமத்துப் பெண்ணாக ஈர்க்கிறார்.

படம் நெடுகிலும் அஜித்தைப் புகழ்ந்து பன்ச் வசனங்கள் பேசுவது என முன்பகுதி, அஜித் ரசிகர்களுக்கு குதூகலத்தைக் கொடுக்கும். ஆனால், சராசரி ரசிக மனநிலையில் அது ஓவர்டோஸ் தோற்றத்தைத் தருகிறது.

x