நயன்தாரா, த்ரிஷாவுக்கு மட்டும் தான் மாஸ் இருக்கா... எனக்கும் தனி நாயகியா படம் பண்ற அளவுக்கு மாஸ் இருக்கு என்று ‘சின்ட்ரல்லா’ படத்தில் இருவேடங்களில் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. பயமுறுத்தும் பேயாகவும், இளம் இசைக்கலைஞராகவும் வருகிற ராய் லட்சுமிக்கு மேக்கப் போடவே நாலு மணி நேரமாகிறதாம். நாலு நயன்தாரா, எட்டு த்ரிஷா ரேஞ்சுக்கு இவர் செய்கிற அலம்பலில் மொத்த யூனிட்டும் தெறிக்கிறதாம்.
ரெண்டுல எந்த கேரக்டருக்கு அவ்வளவு மேக்கப் மேம்?
‘சர்கார்’ சறுக்கினாலும் அது பேசிய வெளிப்படையான அரசியல், பல நடிகர்களையும் ஈர்த்திருக்கிறது. ‘அறம் 2’ படத்திற்கு நயன்தாரா ரெடியாகிவிட்டார். கோபி நயினாரே இயக்கும் இந்தப் படத்தில், மக்களுக்கான இயக்கம் தொடங்கி அரசியல்வாதிகளுடன் மோதுகிற வேடத்தில் வருகிறார் நயன்தாரா.
அடுத்தது, ‘நயன்தாரா மக்கள் இயக்கம்’ தானா?!
மலையாள ‘மலர்’ டீச்சரை தலைமேல் வைத்துக் கொண்டாடிய தமிழகம், ‘தியா’ துளசியை குப்புறத் தள்ளிவிட்டது. “இனிமே வர்ற கேரக்டர் எல்லாம் அப்படியல்ல. ‘மாரி2’வில் க்யூட்டான ‘அராத்து ஆனந்தி’, செல்வராகவன் படத்தில் விஷமத்தனமான வில்லியாக வரும் ‘தொப்புளி ராணி’ கேரக்டர்கள் பெரிதாகப் பேசப்படும்” என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் பல்லவி பாடுகிறாராம் சாய் பல்லவி.
எங்கள ஏமாத்திடாதீங்க டீச்சர்!
காமெடி நடிகர் யோகிபாபு காட்டில் அடைமழை. நடிக்கிற படங்களின் லிஸ்ட் கேட்டால், பத்து விரல்களையும் நீட்டி, மடக்கி மீண்டும் எண்ணுகிறார். நாயகனாக யோகிபாபு நடிக்கும் ‘தர்மபிரபு’ படம், சம்பள அடிப்படையிலும் அவரை வேற லெவலில் கொண்டு போய் நிறுத்துமாம்.
இப்படித்தான் வடிவேலு, சந்தானம்னு ரெண்டு பேரு...