`சர்கார்’ படத்தின் கதை சம்பந்தமான சர்ச்சைகள் எதையும் பொருட்படுத்தாமல், “நம் வேலை முடிந்துவிட்டது, கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்” என்று ரிலாக்ஸாக இருக்கிறார் விஜய். 2019 தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் அட்லியின் படத்துக்கு ஜனவரிக்குப் பிறகே தேதி ஒதுக்கியிருப்பதால், 2 மாதம் ரெஸ்ட்தானாம் விஜய்க்கு.
அட்லி அண்ணே, கதை... கவனம்!
`மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. நாயகியாக ஷாலினி பாண்டேவும், முக்கியக் கதாபாத்திரத்தில் அருண் விஜய், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனி படத்திலேயே பெரிய பட்ஜெட் படம் இதுவாம்!
இதுக்கும் ‘ஷாக்’காத்தான் தலைப்பு இருக்குமோ..?