தொலைக்காட்சி எனும் தொல்லைக்காட்சி - வடிவேலு ஸ்டைலில் ஒரு படம்!


நா.இரமேஷ்குமார்

‘‘அசுர வேகத்துல வளர்ந்துக்கிட்டு இருக்கிற விஞ்ஞான யுகத்துல, வீட்டுக்குள்ளேயே விரல் நுனியில உலகத்தைத் தெரிஞ்சுக்கறோம். முன்னாடியெல்லாம் கிராமத்துக்குன்னு ஒரு தொலைக்காட்சி இருக்கும். பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ்ல வாரக் கடைசியில பொழுதுபோக்க கூட்டமா உட்கார்வோம். மெதுவா, கொஞ்சம் கொஞ்சமா தெருவுக்கு ஒண்ணுன்னு ஆச்சு. அப்புறம் வீட்டுக்கு ஒண்ணுன்னு மாறுச்சு. இப்போ, வரவேற்பறை, படுக்கையறை, குழந்தைகளுக்குன்னு ஒரே வீட்டுக்குள்ளேயே மூணு நாலு தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கிற அளவுக்கு வந்துட்டோம். முதன் முதலா இந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்த ஜனங்களோட ஆச்சரியமும், மகிழ்ச்சியும் எப்படி இருந்திருக்கும். இப்படித் தேட ஆரம்பிச்சதுதான் சார் ‘தொல்லைக்காட்சி’ படத்தோட ஆரம்பப் புள்ளி.

நாம தொலைத்த வாழ்க்கையைத் தேடிப் போற மாதிரியான ஒரு கதை சார். அதை முழு நீள நகைச்சுவையோட சொல்லியிருக்கிறேன்’’ என்று பேச ஆரம்பிக்கிற சாதிக் கான் ‘தொல்லைக்காட்சி’ படம் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஆமிர்கான் நடித்த ‘கஜினி’ யில் உதவி இயக்கு நராகத் தொடங்கி, இயக்குநர் லிங்குசாமியிடம் தொடர்ந்து பணிபுரிந்து சினிமா கற்றவர்.
‘‘தொலை தூரத்துல ஒரு கிராமம் இருக்கு. அந்தக் கிராமத்துல எல்லாருமே ரொம்ப நிம்மதியா, சந்தோசமா வாழ்ந்திட்டு இருக்காங்க. பொதுவா கிராமத்துல, காரை வீடு, டிராக்டர் வீடுன்னு அடையாளப்படுத்திப்பாங்க இல்லையா..? அப்படி புதுசா வர்ற அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை அவங்க எப்படி வரவேற்கிறாங்க, கிராமத்துல அங்கொண்ணும் இங்கொண்ணுமா தொலைக்காட்சிப் பெட்டிகள் வரத் துவங்கிய பின்னாடி, அந்தக் கிராமத்து மனுஷங்களோட வாழ்க்கையில என்னென்ன விதமான மாற்றங்கள் வருது, எப்படியெல்லாம் அவங்களோட நேரம் செலவாகுது, அவங்க எப்படியெல்லாம் தொலைக்காட்சியால கஷ்டப்படு
றாங்க, எப்படி சில பேர் அதைப் பயனுள்ளதா மாத்திக்கறாங்கன்னு எல்லாத்தையும் அத்தனை ரகளையா, வடிவேலு கணக்கா சொல்லியிருக்கோம். வயிறு வலிக்க சிரிச்சபடி ஒரு படம் பார்த்து ரொம்ப வருஷமாச்சுன்ற ஏக்கத்தை இந்தப் படம் போக்கணும்னு நெனச்சு எடுத்திருக்கேன். நாம கடந்து வந்த வாழ்க்கையை இந்தத் தலைமுறைக் குழந்தைகளோட உட்கார்ந்து படமா பார்க்கும்போது எப்படியிருக்கும்னு நெனைச்சுப் பாருங்க.’’

x