ஜருகண்டி - திரை விமர்சனம்


போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து கடன் வாங்கும் இளைஞருக்கு ஆபத்துகள் அடுத்தடுத்து வந்தால் அதுவே ‘ஜருகண்டி.' 

சொந்தமாகத் தொழில் பண்ண நினைக்கும் ஜெய்யும், டேனியலும் தவறுதலாக வங்கியில் கடன் வாங்குகிறார்கள். இதன் மூலம் வரும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை. இதற்கு சரியான திரைக்கதை அமைத்திருக்கிறார்களா என்றால் இல்லை. அதுதான் படத்தின் பிரச்சினையே.

கதைக்குத் தேவையான நடிப்பை முழுமையாகக் கொடுக்காமல் ஜெய் நடித்திருப்பது பெருங்குறை. ‘‘நமக்குத் தேவைங்கிற உடனே நம்ம தப்பை எல்லாம் நியாயப்படுத்துறோம்'' என்று சொல்லும்போது மட்டும் ஜெய் கவனிக்க வைக்கிறார். 

ரெபா மோனிகா இயல்பான பெண்ணாக வந்துபோகிறார். தனக்கு நடந்த பின்னணியை முழுமையாக வெளிப்படுத்தத் தவறியிருக்கிறார். சில காட்சிகளில் இவரது நடிப்பு ரொம்ப செயற்கையாக இருக்கிறது.

x