ஜீனியஸ் -திரை விமர்சனம்


இளமையில் படிப்பு... படிப்பு... படிப்பு... பெரியவனானதும் வேலை... வேலை... வேலை... என்றிருக்கும் ஒருவன் எப்படி மன பாதிப்புக்கு ஆளாகிறான்? அவன் அதிலிருந்து மீள என்ன வழி? என்பதுதான் ஜீனியஸ் படத்தின் ஒன்லைன்.

டீ குடித்துவிட்டு தகராறு செய்யும் அறிமுகக் காட்சி தொடங்கி, யோகா செய்யும் இடம், பெண் பார்க்கப்போகும் இடம் எனப் படம் நெடுகிலும் அறிமுக நாயகன் ரோஷன் செய்யும் அலம்பல்கள் நச்! 

மகனை சாதிக்கவைக்க அழுத்தம் கொடுக்கும் கண்மூடித்தனமான தந்தையாகவும், தன்னால்தான் மகனுக்கு மன நலம் பாதிக்கப்பட்டு விட்டது எனத் தெரிந்து உடையும் இடத்திலும் ஆடுகளம் நரேன் ஈர்க்கிறார். அதிலும் இரண்டாம் பாதியில் ரோஷனின் காதலியை சந்தித்துப் பேசிவிட்டு அவர் நடக்கும் நடையில் தெரியும் கம்பீரம்... மனதிலும் ஈரம்.

ரோஷனின் அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணனும் நிறைவான பங்களிப்பை வழங்கியுள்ளார். ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி, சிங்கமுத்து, சிங்கம்புலி எனப் பெரும்படையே இருந்தும் படத்தில் நகைச்சுவை வறட்சி நிழலாடுகிறது. 

x