அதனால்தான் தமிழ்ப் படங்களில் அதிகம் நடிப்பதில்லை!- - `அரண்மனை கிளி’பிரகதி


மஹா

“ஒரு அம்மாவாக, சக்சஸ் தொழிலதிபராக, பத்துப் பேருக்கு முன்னால் பயப்படாமல் நிமிர்ந்து நிற்கும் கம்பீர பெண்மணியாக... இப்படி பல அவதாரங்கள் தாங்கிய கதாபாத்திரம்தான் நான் இப்போது நடிக்கும் ‘அரண்மனை கிளி’ மீனாட்சி பாத்திரம். எனக்குத் தெரிந்து சின்னத்திரையில் வேற யாரும் இப்படியொரு கேரக்டரை தொடவில்லை என நினைக்கிறேன்!’’ என்கிறார் பிரகதி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் ‘அரண்மனை கிளி’ சீரியலில் தனது நடிப்பு அனுபவங்களை அவர் இங்கே பகிர்கிறார்...

சினிமாவில் நிறைய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கும் நீங்கள், ‘அரண்மனை கிளி’ சீரியல் நடிப்பை ஓவராகக் கொண்டாடுகிறீர்களே..?

கண்டிப்பாக... என்னோட கேரியர்ல ‘அரண்மனை கிளி’ ஒன் ஆஃப் தி பெஸ்ட். ஒரு கதாபாத்திரம் 1000 அத்தியாயங்கள் ஒரு வாழ்க்கையை வாழப்போகிறது. சினிமா அப்படி இல்லையே. 3 மணி நேரத்தில் நமக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு இடத்தில் ஒரு வேலையைச் செய்வோம். ஆனால், சீரியலில் நம் வாழ்க்கையை புதிதாக உருவாக்குகிறார்கள். அதுவும் இந்தத் தொடர்ல வர்ற மீனாட்சி நல்லவங்களா, கெட்டவங்களா என்பதை அவர் வழியே காட்டாமல் எதிரில் இருப்பவர்கள் பார்வையில் உணர்த்தும் விதமாக கதை நகரும். மற்றவர்களுக்கு உந்துதலான ஒரு கதாபாத்திரமும்கூட. இப்படி ரொம்ப திடமான பாத்திரம் என்பதால் பயங்கர பிஸிக்கு நடுவிலும் இதை ஏற்றுக்கொண்டேன்.

x