வசனத்தை அரியணை ஏற்றியவர்!


திரைபாரதி

அது 1942-ம் வருடம். 

பி.யு.சின்னப்பா கோவலனாகவும் கண்ணாம்பாள் கண்ணகியாகவும் நடித்திருந்த ‘கண்ணகி’ திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்த நேரம்.  திராவிட நாடு பத்திரிகையில் சி.என்.அண்ணாதுரை என்ற தனது பெயரில் ‘கண்ணகி’ படத்தைப் பாராட்டி விமர்சனம் எழுதியிருந்தார் அப்போது 33 வயது இளைஞராக இருந்த அண்ணா. குறிப்பாக படத்துக்குக் கதை, வசனம் எழுதியிருந்த இளங்கோவனின் எழுத்தாற்றலைப் பாராட்டியிருந்தார். அந்தப் படத்தில், மதுரை நகரம் தீப்பற்றிக்கொள்ளும்போது கண்ணகியின் வாய்மொழியாக வந்துவிழும் ‘தீ பரவட்டும்’ என்ற இரட்டைச் சொற்கள் அண்ணாவின் மனதுக்குள் அப்போது ஆழமாகப் பதிந்தன. அண்ணாவுக்கு மட்டுமல்ல; அவருக்குப்பின் சினிமாவுக்கு கதை, வசனம் எழுதவந்த ஏ.எஸ்.ஏ.சாமி,  மு.கருணாநிதி ஆகியோருக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ‘கண்ணகி’ திரைப்படத்தின் வசனம். 

பின்னாட்களில் இளங்கோவன் வசனம் எழுதிய ‘கண்ணகி’ ‘மகா மாயா’ ஆகிய படங்களைப் பார்த்தே சினிமாவுக்குக் கதை, வசனம் எழுதவேண்டும் என்ற ஆர்வம் தனக்கு கிளர்ந்ததாக கலைஞர் மு.கருணாநிதியே குறிப்பிட்டிருக்கிறார். ‘கண்ணகி’ படத்தில் அப்படி என்னதான் வசனம் எழுதிவிட்டார் இந்த இளங்கோவன்?

x