விஜய் அஜித்துக்கு நிகராக விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக்குகளுக்கும் தற்போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த வாரம் விஜய் சேதுபதியின் 25 வது படமான சீதக்காதியின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டது படக்குழு. பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்தப் படத்தில் 80 வயதான முதியவர் கேரக்டரில் நடிக்கும் விஜய் சேதுபதியின் இளவயது போஸ்டர் வெளியானது. இதனை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து ட்ரெண்ட் ஆக்கினர். இதற்கு முன்னர் அவரது சூப்பர் டீலக்ஸ் பட போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து புதுப்புது ‘கெட்டப்’களில் விஜய் சேதுபதி நடிப்பது அவருக்
கான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்ட கடைக்காரரைத் தாக்கிய திமுகவினர்.
- செய்தி.
ஸ்டாலின் உங்களுக்கு என்னடா குறை வச்சாரு...
- சண்டியர்.
அதிமுக, இரட்டை இலை சின்னத்தை அமமுக மீட்டெடுக்கும்.
-தினகரன்.
அப்படியே அதிமுக அமைச்சர்களையும் மீட்டெடுங்க... மோடிக்கிட்ட மாட்டிகிட்டு தவிக்கிறாங்க..!
- அஜய் முருகேஷ்.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை பாதியாக குறையும்.
- மோடி.
மக்களே... ரெண்டாவது கிட்னிய எடுக்கத்தான் வா வா னு கூப்புடுறாரு உஷார்..!
- பீட்டர் மாமா.