நா.இரமேஷ்குமார்
காட்சி 1
இடம் : சென்னை அண்ணாசாலை
நேரம்: காலை 9 மணி
வருண பகவானின் வரப்பிரசாதமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாளின் காலை நேரத்தில் எந்தப் பரபரப்பும் இல்லாமல், மாநகரத்தின் டீசல் புகைகளுக்கு விடுமுறை கொடுத்து அண்ணாசாலையை கடக்கும்போது அலைபேசி சிணுங்கியது.
“சார்... நான் ‘எழுமின்’ படத்தோட இயக்குநர். ஒரு நிமிஷம் பேசலாமா..?”
அலுவலகம் சென்றதும் திரும்ப அழைப்பதாய் சொல்லி விட்டு வண்டியின் வேகத்தைக் கூட்டினேன்.