அவர்கள் என்ன செய்வார்கள்?- ஒரு குறும்படம் பேசும் உண்மை


‘நன்றி! நன்றி! நன்றி!

18 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் கண்டுகளித்த ‘ஹெல்ப்’ குறும்படம்… டாக்டர்.ஆர்.பாண்டியராஜன் எம்.ஏ., எம்.ஃபில்., பி.ஹெச்.டி.’ - என்ற வாசகங்களுடன் சென்னை மாநகரின் சுவர்களில் நெஞ்சில் கைவைத்துச் சிரிக்கிறார் இயக்குநர், நடிகர் பாண்டியராஜன்.

பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் பாலியல் உணர்வுகள் பொதுவானதுதான். சராசரி மனிதர்களுக்கு அந்த உணர்வைத் தீர்த்துக்கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு..?

ஆட்டிஸம் போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் அந்த உணர்வு உண்டு என்பதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்கான வடிகால் என்ன என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவே ‘ஹெல்ப்’ என்ற ஆங்கில குறும்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டியராஜன். 

x