சன் டிவி ‘தெய்வமகள்’ தாரணியாக சின்னத்திரை தொடர்களில் வலம் வந்த ஷப்னம், இப்போது விஜய் டிவி ‘ராஜா ராணி’யில் வடிவு எனக் கொண்டாடப்பட்டு வருகிறார். வெகுளிப் பெண், வில்லி, நகைச்சுவை நாயகி என ஒரே சீரியலில் பன்முக திறமைகளைப் படரவிடும் ஷப்னம் ‘காமதேனு’க்காக தந்த மினி பேட்டியிலிருந்து…
சீரியலில் தோன்றும் கதாபாத்திரத்தின் பெயரிலேயே அழைக்கப்படும் பாக்கியத்தை சீக்கிரமே அடைந்து விட்டீர்களே..?
அமையும் கதையும், அதன் இயக்குநர்களும்தான் இதற்கு முக்கியக் காரணம். ஷப்னம் இந்த மாதிரி நடிப்பை வெளிப்படுத்தினால், அதை ஆடியன்ஸ் ரசிப்பார்கள் என இயக்குநர்கள் நம்புகிறார்கள். அவர்கள் சொல்வதை சரியாக வெளிப்படுத்துவதால் தாரணி, வடிவு என எனது கதாபாத்திரங்களின் பெயரே மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிடுகிறது.
‘ராஜா ராணி’ தொடர் நாயகி ஆலியா மானஸா ரொமான்ஸ் உள்ளிட்ட இடங்களில் பெரும் கவனத்தை ஈர்க்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் இருக்கும் தொடரில் உங்களின் தனித்தன்மை கவனிக்கப்படுகிறதா?