ஆண் தேவதை - விமர்சனம்


கார்ப்பரேட் கலாச்சாரத்தில் சிக்கிய மனைவிக்கும், தேவைகளைச் சுருக்கிக்கொண்டு வாழ நினைக்கும் கணவனுக்கும் இடையே பிரச்சினை வெடித்தால் அதுவே ‘ஆண் தேவதை.'

குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்துக் கற்றுக்கொடுப்பது, மகளுக்குக் கதை சொல்லிக் கொண்டே பயணிப்பது உள்ளிட்ட இடங்களில் நல்ல தந்தையாக சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார் சமுத்திரக்கனி. ஆனால், படம் முழுக்க கருத்துச் சொல்லிக் கொண்டே இருப்பது அலுப்பூட்டுகிறது. லாட்ஜின் பக்கத்து அறையில் முனகும் சப்தம் தன் குழந்தைக்குக் கேட்கக் கூடாது என்ற அவஸ்தையில் பெருங்குரலெடுத்துக் கதை சொல்லும் உத்தி ஓரளவு எடுபடுகிறது.

``மனைவியை உயர் அதிகாரியாக நினைச்சுக்கோ’’ என அட்வைஸ் செய்யும் காளிவெங்கட், மனைவியை சந்தேகப்பட்டு திட்டிக்கொண்டே இருக்கும் இளவரசு, சமுத்திரக்கனிக்கு அடைக்கலம் கொடுக்கும் ராதாரவி எனக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற பொருத்தமான நடிகர்களின் தேர்வு படத்துக்கு பலம். ஆனால், அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு இல்லை.

``இந்த உலகத்துல எனக்கு யாருமே இல்லை’’ எனச் சொல்லி சமுத்திரக்கனியை கைப்பிடிக்கும் ரம்யா பாண்டியன் நடுத்தர வர்க்கத்தின் எண்ண ஓட்டத்தை அப்படியே பிரதிபலிக்கிறார்.

x