கவுரியும் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்- ‘96’ ஜூனியர் மக்கள் செல்வன்!


அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு நின்றால், நமக்குப் பின்னாலிருந்து ஹாரன் சத்தம் கேட்கிறது. திரும்பிப் பார்த்தால்… சைடு ஸ்டாண்ட் போட்டபடியே பைக்கிலிருந்து இறங்குகிறார் ஆதித்யா பாஸ்கர். சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ’96’ படத்தில் பள்ளிப் பருவ விஜய் சேதுபதியாக நடித்து, கவனம் ஈர்த்தவர்.

“காலேஜ்ல இருந்து இப்பதான் வர்றேன் பாஸ்…” என்று சொல்லி, நம் தோளில் கைபோட்டபடியே வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார் ஆதித்யா. இந்த ‘ஜூனியர் மக்கள் செல்வன்’, நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் புதல்வன்!

“செம வெயில் இல்ல… காலேஜ்ல எக்ஸாம் வேற நடந்துக்கிட்டிருக்கு. நடுவுல டிவி-க்கள்ல இருந்து இன்டர்வியூ வேற. அப்பப்ப, என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்கிட்டேயிருந்து கால்ஸ், வாட்ஸ் அப் மெஸேஜஸ்னு இந்த நாட்கள், ரொம்ப பிஸியா போய்க்கிட்டிருக்குங்க...” என்று சந்தோஷக் களைப்புடன் சொல்லும் ஆதித்யா, எஸ்ஆர்எம் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு விஸ்காம் மாணவர்!

ஆதித்யா டு ‘கே.ராமச்சந்திரன்’ ஆன கதையைச் சொல்லுங்க…

x