நான் இளைஞர்களுக்கான நல்ல ரோல்மாடல் இல்லை!- ‘நோட்டா’ நாயகன் விஜய் தேவரகொண்டா பேட்டி


மிக இளம் வயதிலேயே, தெலுங்கு சினிமாவில் 100 கோடி வசூல் அள்ளிய படத்தின் நாயகன் என்ற மாபெரும் சாதனைக்குரியவர் விஜய் தேவரகொண்டா. ஆந்திராவில் இவர் எந்த ஊருக்குச் சென்றாலும், இளைஞர்கள் சுற்றிச் சூழ்ந்து கொள்கிறார்கள். இப்போது தமிழ் சினிமாவில் ‘நோட்டா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

‘காமதேனு’ இதழுக்காக அவரிடம் பேசியதிலிருந்து...

தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது எப்படி?

வாய்ப்பு என்பதை விட ஆசை என்பதே பொருத்தமாக இருக்கும். நான் நடிக்க வரும் முன்பே, தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள் வரத் தொடங்கிவிட்டன. ‘பெல்லிசூப்புலு’, ‘அர்ஜுன்ரெட்டி’ போன்ற படங்களைத் தமிழக மக்களும் ரசித்தார்கள்; பாராட்டினார்கள். ஆகையால், எனக்கும் நேரடித் தமிழ்ப்படம் பண்ணும் ஆசை வந்துவிட்டது. அந்த மக்களுக்கு இன்னும் நெருக்கமாக வேண்டுமென்ற ஆசை. மதுரை, தஞ்சாவூர், கோயம்புத்தூரில் உள்ள மக்கள் எல்லாம் பாராட்டியது வியப்பாக இருந்தது. என்னோட அலுவலக முகவரிக்கு பலரும் பரிசுப் பொருட்கள் அனுப்பிவைத்தார்கள். அவர்களுக்கு என்னோட நடிப்பின் மூலமாக நன்றி சொல்ல முடியும் அல்லவா? அதுதான் தமிழ் பிரவேசத்துக்கான காரணம்.

x