விஜய் சேதுபதியுடன் நடிப்பது ரொம்பக் கஷ்டம்!- ‘96’ த்ரிஷா பேட்டி


விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸியாக ஈர்த்த த்ரிஷா, இன்னும் அழுத்தமான கதாபாத்திரம், ஆழமான நடிப்புடன் ‘96' ஜானுவாக அசத்தியிருக்கிறார். கட்சி மாறிப்போய்விட்ட த்ரிஷா ரசிகர்கள் எல்லாம் மீண்டும் அணி திரண்டு திரையரங்குகளில் வாழ்க கோஷம் போட்டுக்கொண்டிருக்க, அவரோ ‘பேட்ட’ படத்துக்காக வாரணாசியில் ரஜினியுடன் ஷூட்டிங்கில் இருக்கிறார். ‘காமதேனு’ பேட்டிக்காக த்ரிஷாவைத் தொடர்பு கொண்டேன். மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பதால் அவரது பேச்சில் அவ்வளவு உற்சாகம்.

காதல் படங்களில் மட்டும் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்துறீங்களே எப்படி?

காதல் படங்களில் நடிக்க ரொம்பப் பிடிக்கும் அவ்வளவுதான். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு முழுமையான காதல் படம் பண்ணியதில்லை. ‘96’ முழுமையான காதல் கதை என்றவுடனே சந்தோஷத்துடன் ஒப்புக்கிட்டேன். எப்போதுமே ஒரு படத்தின் வெற்றிக்கு இயக்குநர்கள் தான் காரணம். படத்தின் வெற்றியில் சுமார் 80% இயக்குநர் கையில்தான் இருக்கிறது. ‘96’ கதையை ப்ரேம் குமார் கூறும் போதே, இவரா அறிமுக இயக்குநர் என்று ஆச்சரியம் ஏற்பட்டது. ஒளிப்பதிவாளராக இருந்தவர் என்பதால், படத்துக்கு என்ன தேவை என்பதை அவ்வளவு அழகாகச் சொன்னார். நான் எப்போதுமே இயக்குநர்களின் நடிகை. அதைத்தான் என் நடிப்பு சொல்கிறது.

`96' படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்னு நினைச்சீங்களா?

x