மீரா ஜாஸ்மினை மிஞ்சீட்டீங்களோ


நடிகையர் திலகமாக ஹிட் அடித்த கீர்த்தி சுரேஷ், சண்டக்கோழி 2-வில்,  டிராக்டர் ஓட்டம், பைக் ஸ்டன்ட் எனத் துறுதுறு காட்டியிருக்கிறாராம். இதுவரை இல்லாத வகையில் இந்தப் படத்தில் ’லிப் - லாக்’ லெவலுக்கே போய்விட்டாராம் கீர்த்தி!

மீரா ஜாஸ்மினை மிஞ்சீட்டீங்களோ மேம்!

‘செக்கச்சிவந்த வானம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘96’, ‘ராட்சசன்’ எனக் கடந்த இரு வாரத்தில் வெளியான படங்கள் அனைத்துக்கும் நல்ல வரவேற்பு. இது தமிழ் சினிமாவுக்குப் பொற்காலம் என்று விமர்சகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கூறி வருகிறார்கள். அடுத்து வரும் ‘2.0’, ‘சர்கார்’ போன்ற பெரிய பட்ஜெட் படங்களும் வசூலைக் குவித்தால், தமிழ் சினிமாவின் வியாபாரம் ஓகோவென இருக்கும் என்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

‘சண்டக்கோழி 2’ - வையும் இந்த லிஸ்ட்ல சேர்க்கலாமா?

x