பரியேறும் பெருமாள்- விமர்சனம்


தெரு நாயாக ஒதுக்கப்படும், துரத்தப் படும் ஒருவன் அத்தனை அவமானங்களையும், ரத்தத்தையும், கோப வெறியையும் துடைத்தெறிந்துவிட்டு ‘குதிரை’ ஏற முயலும் கதைதான் பரியேறும் பெருமாள்.

‘சாதியும், மதமும் மனித வாழ்வுக்கு எதிரானது’ எனப் படத்தின் துவக்கத்தில் திரையில் படரும் வரிகளுக்கு ஏற்ப சாதிய வன்மத்தினால் வரும் விளைவுகளைப் படம் முழுவதுமே படரவிட்டுள்ளார் இயக்குநர்.

சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் இருக்கையில் சாதிய சின்னங்களை வரைந்து வைப்பது, கல்லூரி வாசலில் வரிசை கட்டி நிற்கும் அரசியல் கட்சியின் கொடிகள், முதலாம் ஆண்டில் வரும் இரு ஆங்கில பேப்பர்கள் எனக் காட்சிக்குக் காட்சி சட்டக் கல்லூரி குறித்த நுணுக்கமான காட்சியமைப்புகள் அட போட வைக்கின்றன.

மற்றவர்கள் கேலி பேசும்போது கூனி குறுகுவது, நாயகியிடம் வெள்ளந்தியாய் பழகுவது, ஆசையாய் வளர்த்த நாயைக் கொன்றபோது உருகுவது, அப்பாவை அவமானப்படுத்தியபோது உடைவது, நாயகியின் தந்தையிடம் தன்னை உடைத்துப் பேசுவது எனப் படம் நெடுகிலும் நிறைவான பங்களிப்பை வழங்கியுள்ளார் நாயகன் கதிர்.

x