செக்கச் சிவந்த வானம் - விமர்சனம்


பலே கேங்ஸ்டரான தங்கள் அப்பா மரணமடைந்தவுடன், அவரது இடம் யாருக்கு என்று மகன்களுக்குள் நடக்கும் மோதலே ‘செக்கச்சிவந்த வானம்’.

கடைக்கோடி ரசிகனையும் இப்படம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குநர் மணிரத்னம் கமர்ஷியலில் இறங்கி அடித்திருக்கிறார். ரசிகர்களைப் பொறுத்தவரை மணிரத்னம் மறுபடி பழைய கெத்தோடு! மேட்டிமை ரசிகர்களுக்கு மட்டுமே படம் கொடுப்பதை மறந்துவிட்டு சுறுசுறு மசாலாவாக இப்படி ஒரு படம் எடுத்திருப்பது அவருக்கும் அழகுதான்.

அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு என நான்கு முன்னணி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கி பேலன்ஸ் செய்திருப்பதில் மணிரத்னத்தின் உழைப்பு தெரிகிறது.

கேங்ஸ்டர் கதாபாத்திரத்துக்கு பிரகாஷ்ராஷ் பொருத்தமான தேர்வு. அரவிந்த்சாமி நான் பார்த்துக்கிறேன் பார்த்துக்கிறேன் என்று கண்முன் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார். அவர் பயந்து பதுங்குவதெல்லாம் கதாபாத்திரச் சரிவு. அருண் விஜய் கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார். அலட்டிக்கொள்ளாத கேஷுவலான நடிப்பை சிம்பு தந்திருக்கிறார்.

x