கம்பளிப்பூச்சியாக இருக்கும் அனைவரும் பட்டாம்பூச்சி ஆகலாம்- இயக்குநர் ரமேஷ் அரவிந்த் பேட்டி


நம்ம கும்பகோணத்துக்காரரான ரமேஷ் அரவிந்த், பாலச்சந்தரின் கன்னடப் படத்தில் அறிமுகமாகி, கன்னடத்து சினிமாவிலேயே ஊறிப்போனவர். இப்போதும் மூன்று கன்னடப்படங்களின் ஹீரோ அவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய சினிமா முழுக்க நடிகராகவும், இயக்குநராகவும் புகழைத் தக்கவைத்திருப்பவர். பாலிவுட்டில் சக்கைபோடுபோட்ட ‘குயின்’ படத்தின் தமிழ், கன்னட ரீமேக்குகளை இயக்கிவரும் ரமேஷ் அரவிந்தை, ‘காமதேனு’ இதழுக்காகச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

எப்படி வந்தது ‘குயின்’ வாய்ப்பு?

ஒரு ரசிகனாக ‘குயின்' ரொம்ப பிடிச்ச படம். ஆனால், இதன் ரீமேக்கை நானே இயக்குவேன் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. என்னை அணுகியபோது அடுத்த நொடியே, ‘கண்டிப்பாக செய்றேன்’ என்று சந்தோஷமாக ஒத்துக்கிட்டேன். ஒரே ஒரு நிபந்தனை, தமிழ் மற்றும் கன்னட ரீமேக் இரண்டுமே இயக்குவதாக இருந்தால் மட்டும் பண்றேன் என்றேன். தயாரிப்பு நிறுவனமும் ஓகே என்றார்கள். தயாரிப்பு நிறுவனமும் தென்னிந்தியாவின் 4 மொழிகளிலும் இப்படம் வரணும், நான்கிலும் நான்கு ஹீரோயின்ஸ் பண்ணணும் என்றார்கள். அதை நான் ஏற்றுக்கொண்டேன்.

தமிழுக்கு காஜல் அகர்வாலை எப்படித் தேர்வு செய்தீர்கள்?

x