கன்னடத்து நயன்தாரா நான்!- ‘ஜருகண்டி’ ரெபோ மோனிகா ஜான் பேட்டி


முதல் படத்திலேயே நிவின் பாலிக்கு ஜோடி, அடுத்து, ‘நானும் ரவுடிதான்’ கன்னட ரீமேக்கில் நயன்தாராவின் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு என்று குஷியாக இருக்கிறார் ரெபா மோனிகா ஜான். தமிழ் திரையுலகத்துக்கு, ‘ஜருகண்டி’யாக வரும் அவருடன் ஒரு பேட்டி...

தமிழுக்கு வரும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம். தமிழுக்கு வருவதை நீங்கள் எப்படி உணர்றீங்க..?
மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிச்சிருந்தாலும், முதன்முதலா தமிழ்ப்படத்தில் நடிக்கும்போது டென்ஷன் இருக்கத்தான் செய்தது. படத்தின் கதையையும், என்னுடைய கேரக்டரையும் பற்றிக் கேட்டபோது, என்னால் மறுக்க முடியல. தலைவி நயன்தாரா மேல பாரத்தைப் போட்டுட்டு களமிறங்கிட்டேன்.

நயன்தாரா ரசிகையா நீங்க?

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? எனக்கு மட்டுமில்லை, பெரும்பாலான நடிகைகளுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் அவங்கதான். குறிப்பாக, கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்குத் தன்னம்பிக்கை அவரிடம் இருந்துதான் கிடைக்கிறது. எந்தப் பின்புலமும் இல்லாமல், இத்தனை வருடங்களாக ஹீரோயினாக நடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. நிச்சயம் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை அடைந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நடிகையாக மட்டுமின்றி, மனுஷியாகவும் எனக்கு அவரைப் பிடிக்கும். ‘நயன்தாராவின் ரசிகை’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமை எனக்கு.

x