வாழும் மண்டோ..!


அந்தச் சிறுமி, தோழியுடன் பாண்டி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். கார் வருகிறது. பெற்றோரால் அவசர அவசரமாக அலங்கரிக்கப்பட்டு, அதில் அனுப்பி வைக்கப்படுகிறாள். காருக்குள்ளே, ஓட்டுநருடன் சேர்த்து மூன்று பேர். அந்தப் பொழுது அவர்களுடன் என்றாகிறது.

கடற்கரையில் குதூகலிப்புடன் அவர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடுகிறாள். தன் குழந்தைத்தனங்களால் அந்த மூவரையும், மீண்டும் குழந்தைகளாக்குகிறாள். நேரம் போனதே தெரியவில்லை. நள்ளிரவில் வீடு திரும்புகிறாள். காலையில் அந்தக் காரோட்டி, தன்னிடம் தந்த 10 ரூபாயை அவனிடமே திருப்பித் தந்துவிட்டு, சந்தோஷச் சிரிப்புடன் விடைபெறுகிறாள். அந்தக் காரோட்டி, பின் சீட்டில் இருப்பவர்களைத் திரும்பிப் பார்க்கிறான்.

‘அந்தப் பத்து ரூபாய் நோட்டைப் போலவே அந்த இருவரும் கசங்கிக் கிடந்தார்கள்’ என்பதுடன் அந்தக் கதை முடிகிறது. இப்படித்தான் தொடங்குகிறது ‘மண்டோ’ படம். நந்திதா தாஸ் இயக்கத்தில், நவாஸுதீன் சித்திக்கி நடிப்பில், இந்தி, உருது மொழிகளில் வசனங்களைக் கொண்ட இந்தப் படம், கடந்த வாரம் வெளியானது.

மறைந்த உருது எழுத்தாளர் சாதத் ஹசன் மண்டோ, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைத் துயரங்களின் நேரடி சாட்சிகளில் முக்கியமானவர். அப்போது நடந்த குற்றங்களைத் தன் கதைகளின் மூலம் விசாரித்து, எழுத்தின் வழியே தர்ம, நியாயங்களை எடுத்துரைத்தவர்.

x