ராஜா ரங்குஸ்கி - விமர்சனம்


காதலியை இம்ப்ரஸ் செய்ய  காதலன்  விளையாட்டாய் தொடங்கும் செல்போன் அழைப்பு, ஒருகட்டத்தில் மிரட்டும் குரலாக துரத்துகிறது. மேலும், சில கொலைகளும் நடக்கின்றன. காதலுக்கும், கொலைக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை த்ரில்லர் பாணியில் விவரிக்கிறது ‘ராஜா ரங்குஸ்கி’.

“காதலில் பொய் சொல்லக் கூடாது, ஏமாற்றக் கூடாது, நடிக்கக் கூடாது” எனப் படத்தில் வரும் வரும் வசனம் தான் கதையின் அடிநாதம். படத்தின்  முன்பகுதியில் இது மூன்றையும் நாயகனும், பின்பகுதியில் நாயகியும் அப்பட்டமாய் மீறுகிறார்கள். 

நாயகன் மெட்ரோ சிரிஷுக்கு கடைநிலை காவலர் பாத்திரம்.  எழுத்தாளரான நாயகி சாந்தினியைப் பார்த்து காதல் வயப்படுவது, கொலைகளைக் கண்டு நடுங்குவது, மிரண்டு ஓடுவது, தான் கொலை செய்யவில்லை என நிரூபிக்க போராடுவது  எனப் பாத்திரத்துக்குத் தகுந்த நடிப்பை வழங்க முயன்றிருக்கிறார். நாயகி சாந்தினி முன்பகுதியில் பதுமையாகவும், பின்பகுதியில் பாய்ச்சலாகவும் வருகிறார். ஆனால், இருவருமே இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். 

சிரிஷோடு சக காவலனாக பயணிக்கிறார் கல்லூரி வினோத். அவரை நகைச்சுவைக்கு  இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டரை சிபிசிஐடி அதிகாரி நடத்தும் விதம், தப்பியோடிய சிரிஷுக்கு பிரியாணியோடு காவலர் வந்து நிற்கும் இடம் என சில இடங்களில் மட்டுமே  சிரிக்க வைக்கிறது. அப்படியும் படம் முழுக்கவே ஒருவித இறுக்கத்துடனே நகர்கிறது

x