சாமி ஸ்கொயர் - விமர்சனம்


அப்பா ஆறுச்சாமியின் சாவுக்குக் காரணமான ராவணப் பிச்சையை வித்தியாசமான முறையில் பழி தீர்க்கும் மகனின் கதை ‘சாமி ஸ்கொயர்'.

விக்ரமுக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது கனவு. அதற்கான தேர்வை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கிறார். இடையில், முறையற்ற வழிகளில் நடக்கும் தவறுகளை எதிர்க்கிறார். இதனால் காதலுடன் சேர்ந்து பிரச்சினைகளையும் சந்திக்கிறார். இதனால், ஐஏஎஸ் ஆகாமல்,  திடீரென ஐபிஎஸ் ஆகி வெறிகொண்ட வேங்கையாய் வில்லனைப் பழிவாங்கப் புறப்படுகிறார். அவரின் முன்கதை, பின்கதை என்ன என்பதை விவரிக்கிறது திரைக்கதை. 

சாமி படத்தின் டெம்போ கொஞ்சமும் குறையாமல் ரசிகர்களுக்குக் கடத்திய விதத்தில் இயக்குநர் ஹரி ஜெயித்திருக்கிறார். வழக்கமான மசாலாவாக இருந்தாலும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். 

முந்தைய சாமிக்கும் இந்த ஸ்கொயருக்குமான கால வித்தியாசம் விக்ரமிடம் தெரியாமல் இருக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். முடிந்த வரை அதே தோரணை, அதே குரல் மாடுலேஷனை காட்ட முயன்றிருக்கிறார்.  படத்தின் மொத்தப் பாரத்தையும் அவரது தோளில் ஏற்றிவிட்டார் இயக்குநர். 

x