‘சீமராஜா’ செப்டம்பர் 13-ம் தேதி ரிலீஸ். அதற்கு முந்தைய நாள் சூரியின் சிக்ஸ்பேக் ஸ்டில்லை வெளியிட்டார் சிவகார்த்திகேயன். ஒரே பாராட்டு மழை. கூடவே, படத்தைப் பார்த்துவிட்டு மோசமாக விமர்சித்தவர்களால் அவர் கோபமாக இருப்பதாகவும் கேள்வி. வாங்க சூரியிடமே கேட்கலாம்.
என்ன சார் திடீர்னு ‘சிக்ஸ் பேக்'கெல்லாம் வெச்சிட்டீங்க?
நானா வெக்கல சார். கதையைச் சொன்ன இயக்குநர், இந்தப் படத்துக்காக நீங்க சிக்ஸ்பேக் வெக்கணும்னு சொன்னாரு. காமெடியாத்தான் சொல்றாருன்னு நினைச்சி, “ஓ... ஷங்கர் சார் படத்துல விஜய் அண்ணன் ஒரு காஸ்ட்டியூம் போட்டுட்டு வருவாரே அந்த மாதிரியா?”ன்னு கேட்டேன். இல்ல நிஜமாவே உடம்பை ஏத்தணும்னு சொன்னாரு. “சார்... தம்பி சிவாக்கிட்ட இதைச் சொன்னாவாவது ஒரு நியாயமிருக்கு. என்னைய ஏன் வம்புல மாட்டி விடுறீங்க?”ன்னு தப்பிக்கப் பாத்தேன். பொன்ராமும், சிவாவும் என் மண்டைய கழுவி ஒத்துக்க வெச்சிட்டாங்க.
சிக்ஸ்பேக் வந்த வெற்றிக் கதையை, ‘பீர் தொந்தி’ இளைஞர்களுக்குச் சொல்லலாமா?