முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பதுபோல, மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அறிமுகமாகியிருக்கிறார் டயானா இரப்பா. மாடலிங் மங்கைக்கேற்ற ஒல்லியான உடல்வாகு, கிங் ஃபிஷர் காலண்டரில் போஸ் என்றிருந்தவர் இப்போது, பெரிய இயக்குநர், பெரிய நடிகர்கள், இந்தியா முழுவதும் வெளியீடு என்ற மகிழ்ச்சியில் திளைக்கிறார். அவரை ‘காமதேனு’ இதழுக்காகச் சந்தித்தேன்.
‘செக்கச்சிவந்த வானம்' வாய்ப்பு எப்படி அமைந்தது?
மும்பையில்தான் நடிகர்கள் தேர்வு நடந்தது. மணி சார் டீமைச் சேர்ந்த சிவா சாரும், ஷாத் அலியும் தான் மேற்பார்வை. சில வாரங்கள் கழித்து மணி சார் அலுவலகத்திலிருந்து அழைப்பு. ஆயிரம் கனவுகளுடன், சென்னைக்குப் பறந்துவந்தேன். ரொம்ப ஃப்ரெண்ட்லியா பேசினார் மணி சார். பதற்றத்தைத் தணித்து சவுகரியமாக உணரவைத்தார். திரைக்கதையின் ஒரு பகுதியை மட்டும் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அப்போதும்கூட படத்தில் நடிப்பேனா என்பது உறுதியாகவில்லை. குழப்பத்தோடு மும்பைக்குப் போய்விட்டேன். 2 வாரங்கள் கழித்துத்தான், நான் தேர்வாகிவிட்ட செய்தியைச் சொன்னார்கள். காலேஜ்ல கோல்ட் மெடல் வாங்கியதுபோல, குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்லி சந்தோஷப்பட்டேன், பெருமைப்பட்டேன்.
மணிரத்னத்துடன் பணிபுரிந்த அனுபவம் எப்படியிருந்தது?