கா.இசக்கி முத்து
‘குக்கூ' என்று பறவை மொழியில் ரஜினி கூவ, மக்களின் கையில் இருக்கும் செல்போன்கள் எல்லாம் திடீரென இறக்கை முளைத்துப் பறக்க, ராட்சத காகமாய் அக் ஷய் குமார் வலம் வர, சமீபத்தில் வெளி வந்திருக்கும் ‘2.0’ டீஸர் வைரல் பறவையாய் சிறகடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு படத்தின் டீஸர் ரிலீஸ் ஆகி ஹிட் ஆனால், அந்தப் படக்குழு உலக மகா சந்தோஷத்தில் இருப்பார்கள். ஆனால் 2.0 படக்குழுவோ கலங்கி, தயங்கி, மயங்கி நின்றுகொண்டிருக்கிறது. நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று இயக்குநர் ஷங்கர் அறிவித்துவிட்டதால், ஒவ்வொரு நாளையும் கலக்கத்தோடு கடந்து கொண்டிருக்கிறார்கள் 2.0 டீம்.
அப்படி என்ன பிரச்னை? ‘ராஜாளி’ பார்வையில் பார்ப்போம்.
எகிறிய பட்ஜெட்