இமைக்கா நொடிகள் - திரை விமர்சனம்


சிபிஐ ஆபிஸரையும், அவரது தம்பியையும் சிக்க வைப்பதற்காக முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர், கடத்திக் கொலை செய்யும் சீரியல் கில்லராக மாறும் கதை ‘இமைக்கா நொடிகள்’.

பார்வையாலும் தோரணையாலும் நயன்தாரா மிரட்டியிருக்கிறார். மிகவும் துணிச்சலானவர், அவர் அழுது யாருமே பார்த்ததில்லை என்று படம் முழுவதும் உணர்த்தப்படுகிறது. அவர் அழும் ஒரே ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சியும் அவருடைய வைராக்கியத்துக்கு உரமாக அமைகிறது. ஆனால், அவர் கட்டளையிடுவது, குற்றவாளியைக் கண்டுபிடிக்கத் திட்டம் தீட்டுவது, பின் ஏமாறுவது எனக் கதை கட்டமைக்கப்பட்டிருப்பது சறுக்கல்.

அனுராக் கஷ்யப்பை சீரியல் கில்லர் பாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்தமைக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்துக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். அவருடைய உடல் தோற்றமும் அலட்சியமாகச் சிரித்துக்கொண்டே இருக்கும் முகபாவனையும் கதாபாத்திரத்துக்கு நன்றாகப் பொருந்துகின்றன. அவருக்குப் பின்னணி பேசியிருக்கும் மகிழ் திருமேனியின் குரலும் அட்டகாசம்.

காதல் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார் அதர்வா. இரண்டாம் பாதி முழுக்க தன்னைப் புத்திசாலித்தனம் மிகுந்த ஆக்‌ஷன் நாயகனாக நிலைநிறுத்திக் கொள்கிறார்.

x