கமர்சியல் வேண்டாம்... கதைதான் முக்கியம்..!- களம் மாறும் சமந்தா


கனவுக்கன்னியாக கொண்டாடிக் கொண்டிந்த ஹீரோயின்களுக்கு கல்யாணமாகி விட்டால், ‘அக்கா’ என்று சொல்லி மரியாதையாக விலகிவிடுவது தமிழ் சினிமா ரசிகர்களின் பெருந்தன்மையான(!) குணம். இதற்கு விதிவிலக்கு சமந்தா. இன்னமும் அவரை தென்னக இளைஞர்கள் தோழியாகவே கொண்டாடுகிறார்கள். ‘சீமராஜா’, ‘யு-டர்ன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ என்று கைவசம் நிறைய தமிழ்ப்படங்களையும் வைத்திருக்கும் அவரை சென்னையில் சந்தித்தேன்.

‘யு-டர்ன்’ கன்னட படம் வெளியாகும் முன்பே, அதன் ரீமேக்கில் நடிக்க முடிவு செய்துவிட்டீர்களாமே... எப்படி?

பவன்குமாருடைய முதல் படமான ‘லூசியா’ பார்த்தபோதே அவரது ரசிகையாகிவிட்டேன். அவருடைய ஃபிலிம் மேக்கிங் ரொம்ப வித்தியாசமானது. அப்போதிலிருந்து அவரிடம் சினிமா பற்றி  பேசத் தொடங்கிவிட்டேன். இந்த நேரத்தில்தான், ‘யு-டர்ன்’ கன்னட ட்ரெய்லர் பார்த்தேன். ஏன் இக்கதையைத் தமிழ், தெலுங்கில் பண்ணவில்லை என்ற யோசனை வந்தது. பவனிடம் கதை கேட்டேன். உடனே தமிழ், தெலுங்கில் பண்ணலாம் என்று முடிவெடுத்து விட்டேன். அதற்குள்ளாக கன்னடத்தில் வெளியான படமும் ஹிட்டாக, அவரே தமிழ், தெலுங்கு இரண்டையும் இயக்க ஒப்புக் கொண்டது கூடுதல் சந்தோஷம். இந்தப் படம் நிறைய மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை.

இத்தனை ஆர்வமிருந்தும், ‘யு-டர்ன்’தமிழில் நடிக்க 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது ஏன்?

x