நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு...நடிப்பெல்லாம் நமக்கு எதுக்கு..? - நிஜம் பேசும் நிவேதிதா!


‘‘நிகழ்ச்சித் தொகுப்பாளினியா சேனல் பக்கம் வந்து வருஷம் ஆறு முடியப்போகுது. இன்னும் ஏன் நடிக்க வரலைன்னு இன்ஸ்டாகிராம் வரைக்கும் நிறைய மெசேஜ். இப்போ நாம செஞ்சுட்டிருக்கிற வேலை மேல அளவுக்கதிகமான ஈர்ப்பு இருந்துட்டா, அதுவே நம்மை முழுசா ஆக்கிரமிச்சிரும். இந்தத் தொகுப்பாளினி அவதாரம் என்னை அப்படித்தான் முழுசா ஆக்கிரமிச்சிருக்கு!’’ இனிக்க மணக்கப் பேசுகிறார் நிவேதிதா. சன் மியூசிக் சேனலில் கோலிவுட் சென்டர், `ஃபிராங்கா சொல்லட்டா’, `24 பிரேம்’ என அழகழகான நிகழ்ச்சிகளை அணிவகுத்துத் தரும் நிவேதிதாவுடன் ஒரு சில நிமிடங்கள் பயணம் செய்ததிலிருந்து…

 இப்போதெல்லாம் உங்களது நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சினிமா சார்ந்ததாகவே இருக்கிறதே?

ஆமாம். முன்பெல்லாம் இந்த மாதிரி செலிப்ரட்டி நிகழ்ச்சிகள் என்றால் கொஞ்சம் டைம் எடுக்கும். ஒரு விஷயத்துல நம்ம பழகி ஊறிட்டா அது ஈஸியா ஹேண்டில் பண்ற விஷயமா ஆகிடும் இல்லையா... அந்த மாதிரிதான் இப்போ என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை சரியா பயன்படுத்திக்கிறேன். போக வேண்டிய தூரம் நிறைய இருந்தாலும் இதை ரொம்பவே மகிழ்ச்சியான தருணமாகப் பார்க்கிறேன்.

 சன் மியூசிக் சேனலில் முன்பு இருந்த ஹேமா, நிஷா, அஞ்சனா உள்ளிட்ட தொகுப்பாளினிகளின் இடத்தை நீங்கள், தியா, மணிமேகலை உள்ளிட்டவர்கள் பூர்த்தி செய்கிறீர்களா?

x