வெறும் பொழுதுபோக்குப் படங்களை எடுக்க மாட்டேன்!- ‘மேற்குத் தொடர்ச்சிமலை’இயக்குநர் லெனின் பாரதி பேட்டி


வெளியாகும் முன்பே கவனம் ஈர்த்த படம், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. 11 திரைப்பட விழாக்கள், அவற்றில் 4 விருதுகள் எனக் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி என்பதும் இசை இளையராஜா என்பதும் கூடுதல் சிறப்பு. பட போஸ்டர்கள் வழியாகவே ஒரு வாழ்வியலைச் சொல்லும் ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ இயக்குநர் லெனின் பாரதியை ‘காமதேனு’ இதழுக்காகச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

மேற்குத் தொடர்ச்சிமலை’ என்ன சொல்ல வருகிறது?

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் நடக்கும் வாழ்க்கைப் பதிவு. விஜய்சேதுபதியைத் தவிர மற்ற எல்லோரும் புதுமுகங்கள். நாயகனாக ஆன்டனி, நாயகியாக காயத்ரி கிருஷ்ணா. நம் வாழ்க்கையைத்தான் படமாக்குகிறார்கள் என்று புரிந்துகொண்டு ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ மக்களும் அதிக ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அவர்களாகவே நடிக்க வைத்திருக்கிறேன். தேனியில் தங்கி மலைவாழ் மக்களைப் பற்றி கள ஆய்வு மேற்கொண்டதால், படப்பிடிப்பை 48 நாட்களுக்குள் முடித்துவிட்டேன். இயற்கைதான் கதைக் களம். வெளிச்சம் தேவைப்படும் இடத்தில் தீப்பந்தம், தெரு விளக்கு ஒளியில்தான் படப்பிடிப்பு. தேனி ஈஸ்வருடைய ஒளிப்பதிவு கண்டிப்பாக பிரமிக்க வைக்கும். ஒரு நிலவியல் சார்ந்த வாழ்க்கையைப் பக்கத்தில் போய் பார்த்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் படத்தின் காட்சிகளும் இருக்கும்.

ஆக, நிலம் சார்ந்த அரசியலைப் பேசும் படம் இது என்று சொல்லலாமா?

x