தேசத்தின் முதல்  'தங்கம்’- பழி தீர்க்கப்பட்ட 200 ஆண்டுகள்


ஆகஸ்ட் 12, 1948.

சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்னால், லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப் போட்டியில், பிரிட்டிஷ் அணியைத் தோற்கடித்து, தங்கம் வென்றது இந்திய அணி. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, குழு விளையாட்டில் வென்ற முதல் தங்கம் அது!

அந்த வெற்றி, பிரிட்டிஷ் அணிக்கு எதிரானதாக மட்டும் பார்க்கப்படவில்லை. 200 ஆண்டுகளுக்கும் மேல் நம்மை அடிமைப்படுத்தி வைத்த ஒரு காலனியாதிக்க நாட்டைப் பழிதீர்த்த விஷயமாகவும் அது பார்க்கப்பட்டது.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பார்கள். ஆனால், அந்த விளையாட்டைக் கண்டுபிடித்ததே பிரிட்டிஷ்காரர்கள்தான். அவர்கள் வளர்த்தெடுத்த விளையாட்டை விளையாடி, அவர்களின் சொந்த மண்ணிலேயே அவர்களை இந்தியர்கள் தோற்கடித்தது, அன்றைய தேதிக்கு இமாலய சாதனைதான்!

x