பியார் பிரேமா காதல் - திரை விமர்சனம்


விங் டுகெதரா? திருமணமா? என்கிற பட்டிமன்றம் தான் படம். சிந்துஜா (ரெய்சா) லிவிங் டுகெதரே என்று அடம்பிடிக்க, மிடில் கிளாஸ் பையனான ஸ்ரீகுமார் (ஹரிஷ் கல்யாண்) கல்யாணம் செய்வோமே என்று படம் முழுக்கக் கெஞ்சுகிறார். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே ‘பியார் பிரேமா காதல்’.

நாயகனாக ஹரிஷ் கல்யாண் அவ்வளவு க்யூட்டாக இருக்கிறார். ஒரு பெண்ணை ‘இம்ப்ரஸ்’ பண்ண அவர் படும் பாடு, அம்மா அவசரமாகக் கூப்பிடும்போதுகூட ‘இரும்மா ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிட்டு வாரேன்மா’ என்று சொல்வது என நவயுக இளைஞனை அப்படியே திரையில் காட்டுகிறார்.

நாயகியாக  ரெய்சா. நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார். நாயகன் - நாயகி இருவரும் காதலர்களாக நடித்திருக்கிறார்களா இல்லை வாழ்ந்திருக்கிறார்களா என்று சந்தேகப்பட வைக்கிறார்கள். அந்த அளவுக்குப் படத்தின் கதையோடு ஒன்றியிருக்கிறார்கள். படம் முழுக்கவே இவர்களை முன்னிலைப்படுத்தியே அனைத்துக் காட்சிகளும் பின்னப்பட்டு இருக்கின்றன.

லிவிங்  டுகெதரின் ‘சிறப்பு’களை விளக்கி படம் எடுத்திருந்தாலும், பெற்றோர்களே அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு லாவகமாகக் கதை சொல்லியிருப்பதில் அறிமுக இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. நட்பு, காமெடி, பெற்றோர்களுக்கான முக்கியத்துவம் என போரடிக்காமல் திரைக்கதையை வலுவாக அமைத்திருக்கிறார் இயக்குநர் இளன்.

x