‘அகில இந்திய’ இந்தியன்!


‘விண்ணைத்தாண்டி வருவாயா’ 2-ம் பாகத்தின் வேலைகளைத் தொடங்கியுள்ளார் கவுதம் வாசுதேவ் மேனன். சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசப்பட்டுள்ளது. முதல் பாகத்தில், த்ரிஷாவுக்கு திருமணமாகி விட்டதால், 2-ம் பாகத்தில் சிம்புவின் காதலியாக நடிக்கவுள்ளார் அனுஷ்கா.

மனசு அனுஷ் அனுஷ்ன்னுசொல்லுதா?!

‘சர்கார்’ படத்தை முடித்துவிட்டு, 5 மாதங்கள் முழுமையாக ஓய்வெடுக்கப் போகிறார் விஜய். ஜனவரியில்தான் அட்லீயுடனான அடுத்த படம் தொடங்குகிறது. இன்னும் திரைக்கதையை முழுமையாக அட்லீ முடிக்காததால், இடையில் எந்தவொரு படமும் அவசரகதியில் பண்ண வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் தளபதி!

அட்லீ... கதை என்னனு இந்தபிட்லீக்காச்சும் சொல்லுங்களேன்!

x