வைரமுத்துவுடன் தொழில் ரீதியான நட்பு மட்டுமே!- எவர் க்ரீன் யுவன் சங்கர் ராஜா பேட்டி


பெயரைச் சொன்னாலே பல நல்ல பாடல்கள் நினைவுக்கு வரும் இளமைத்துடிப்பான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இசையில் சதமடித்தவர். கூடவே, சில பாடல் காட்சிகளில் முகமும் காட்டியவர், இப்போது அப்பா வழியில் தயாரிப்புத் தளத்திலும் இறங்குகிறார். நிறைய கேள்விகளுடன் அவருடைய ஸ்டுடியோவுக்குச் சென்றால், ஆழ்கடல்போல் அமைதியாக அத்தனை கேள்விகளையும் நிதானமாகக் கேட்டு பதில் சொன்னார். ‘காமதேனு’ இதழுக்காக, இளையராஜாவின் இளைய வாரிசு யுவனிடம் பேசியதிலிருந்து...

 திடீரென்று என்ன தயாரிப்பாளர் அவதாரம்?

ரொம்ப நாளாவே படம் தயாரிக்கணும்கிற ஆசை இருந்துச்சு. இடையில் கொஞ்சம் அதிகமான இசையமைக்கும் பணிகள் இருந்ததால், தயாரிப்பை ஒத்திவைத்தேன். ரசிகர்களுக்காக ஏதேனும் பண்ண வேண்டும் என்றார்கள். ஆல்பம், இசை நிகழ்ச்சி என்ன பண்ணலாம் என்று பேசிட்டு இருக்கும் நேரத்தில்தான் படம் தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன். ரசிகர்களும் என்னிடமிருந்து காதல் பாடல் வருவதில்லை என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அதனால், கண்டிப்பாக காதலை மையக் கருவாக கொண்ட படத்தைத்தான் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கேற்ற கதையைக் கேட்க ஆரம்பித்தேன்.

இசையமைப்பாளர் யுவன், தயாரிப்பாளர் யுவன் என்ன வித்தியாசம்?

x