சன் டிவியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகி வரும் ‘சண்டே கலாட்டா’ நிகழ்ச்சியை காமெடி, ஆட்டம், பாட்டம் என செம கல கலப்பாக வழங்கி வருகிறது ஜெனிஃபர் - ஸ்வேதா கூட்டணி. ஒரு திடீர் சந்திப்பில் இந்த ஜாலி கூட்டணியிடம் சின்னதாய் ஒரு பேட்டி எடுத்தேன். என்னை கேள்வி எதுவும் கேட்கவிடாமல் அவர்களாகவே அனைத்தையும் ஒப்பித்தார்கள்!
‘‘என்னோட எட்டு வருஷ ஃப்ரெண்ட் ஸ்வேதா. எப்பவும் துறுதுறுன்னு ஏதாவது காமெடி பண்ணிக்கிட்டே இருப்பா. இவ இருக்குமிடம் எப்பவுமே கலகலப்பா இருக்கும். இவளை சன் டிவி நிகழ்ச்சிக்குள்ள கொண்டு வர்றதுக்குள்ள நான் படாத பாடு பட்டிருக்கேன். இந்த ‘சண்டே கலாட்டா’ ஷோ-வுக்கு முன்பு ‘ஸ்டார் வார்’ நிகழ்ச்சியை நாங்க வழங்கினோம். அது அட்வெஞ்சர் ஷோ என்றதும் இவளுக்கு பயம். அதனாலயே அந்த ஷோவுக்கு வர மாட்டேன்னு ஓடினா. எப்படியோ ஒரு வழியா இவளைச் சம்மதிக்க வெச்சு சீசன் 2-வுக்குள் கொண்டு வந்தேன். அடுத்து இது காமெடி ஷோங்கிறதால அம்மாவ இப்ப கையில பிடிக்கமுடியலை. இப்போ அவ்ளோ க்யூட்டா பேர் வாங்கிட்டோம். நான் இல்லாம இவ இல்ல... இவ இல்லாம நான் இல்லைங்கிற அளவுக்கு ஆடியன்ஸே பாராட்டா ஆரம்பிச்சுட்டாங்க’’ என்று ஜெனிஃபர் சொல்லி முடிக்கும் முன்பே, “மீதிக் கதையை நான்.. சொல்றேன்..” என்று முந்திரிக் கொட்டையாய் முந்துகிறார் ஸ்வேதா.
‘‘மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு வந்தப்போதான் ஜெனி எனக்கு அறிமுகம். முதன் முதல்ல இவளப் பார்த்ததும், ‘ஏய் நீங்க... ‘கில்லி’ படத்துல விஜய்க்கு தங்கையா நடிச்சீங்கதானே... உங்களோட பெரிய ஃபேன் நான்’னு சொல்லி கட்டிப்பிடிச்சிக்கிட்டேன். அப்போலருந்து இப்ப வரைக்கும் நாங்க திக் ஃப்ரெண்ட்ஸ். இடையில ஒரு ப்ரேக் எடுத்துக்கிட்டு நான் பிரான்சுக்குப் படிக்கப் போய்ட்டேன். அப்பவும் போன்ல டச்லயே இருந்தோம். திரும்ப ஜீ தமிழ் சேனல் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சிக்குத்தான் வந்தேன். அதைப் பார்த்ததும் ‘சூப்பர் கம் பேக் ஸ்வேதா’ன்னு ஜெனி எனக்கு மெசேஜ் அனுப்பினா. மீண்டும் எங்க நட்பு இன்னும் பலமாச்சு. ‘ஸ்டார் வார்’ நிகழ்ச்சியை டிவி-யில பார்க்கும்போதே பயமா இருக்கும். அதெல்லாம் நமக்கு சரி வராதுன்னுதான் இருந்தேன். ஜெனிக்காகத்தான் சம்மதிச்சேன். இப்போ, ‘சண்டே கலட்டா’ செம ஜாலியா போயிட்டிருக்கு” என்ற ஸ்வேதாவிடம்,
`` ‘கில்லி’ படம் வந்து பல ஆண்டுகள் ஆனபிறகும்கூட அந்தப் படத்தில் விஜய் அழைப்பது போலவே ஜெனிஃபரை ‘அரிசி மூட்டை, அரிசி மூட்டை’னு எல்லோரும் கலாய்ப்பாங்க. நீங்களும் அப்படித்தான் கலாய்க்கிறீங்களா?’’ - என்றதும்,