கஜினிகாந்த் - திரை விமர்சனம்


ஞாபக மறதி கொண்ட நாயகன், தன் பிரச்சினைகளைத் தாண்டி காதலியைக் கரம் பிடித்தானா என்பதுதான் ‘கஜினிகாந்த்’. தெலுங்கில் வெற்றிபெற்ற ‘பலே பலே மகாடிவோய்’ படத்தின் ரீமேக்.

அடுத்தடுத்து ‘விவகார’மான படங்களை இயக்கிய சந்தோஷின் முதல் ‘யு’ சான்றிதழ் படம். அதுவே ‘சாதனை’தான்! அப்படியும் சில இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள்! அதுமட்டுமன்றி, முதல் பாதியில் பல காட்சிகள் ஈர்க்கவே இல்லை.

‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் வரும் மறதி ரஜினிகாந்த் பாத்திரத்தின் நீட்சியாக இதில் ரஜினி ரசிகராக, மறதியில் 'கஜினி' சூர்யாவின் நகலாக வருகிறார் ஆர்யா. போனில் பேசிக்கொண்டிருக்கும் தன் காதலியின் பெயரையே மறந்துவிடும் அளவுக்கு ஞாபக மறதி உள்ள ஆர்யா, அதை மறைக்க எடுத்துவிடும் பொய் மூட்டைகள் ரசிக்க வைக்கின்றன.

நாயகியாக சாயிஷா. நடிப்பதற்கு காட்சிகள் வலுவாக இல்லையென்றாலும், நடனம் மூலம் ஈர்க்கிறார். ஆனால், ஒருத்தன் வார்டு மாறி வந்து ரத்தம் கொடுத்ததற்கு காதல் வருவதெல்லாம் டூ மச்.

x