முத்து முத்தாய் தமிழ் பேசும் மும்பை பொண்ணு!- ‘செம்பருத்தி’ ஷபானா


சின்னத்திரை மூலமா பிரபலம் ஆகணும்கிறதுக்காக நான் இங்கு வரவில்லை. நடிப்புன்னா எனக்கு உயிர். அந்த ஆர்வத்துல, பிடிச்ச வேலையைச் செய்வோம்னுதான் மும்பையில இருந்து கிளம்பினேன். ஆனா, செம்பருத்தி தொடரின் பார்வதி கேரக்டர் என்னை இவ்ளோ உயரத்துக்குப் பிரபலமாக்கும்னு நினைச்சுக்கூட பார்க்கல. எனக்கே இந்த உயரம் பயத்தைக் கொடுத்திருக்கு!’’ துணிவும், பணிவும் கலந்து பகிர்கிறார் ஷபானா.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ சீரியல் வழியே கவனத்தை ஈர்த்து வரும் அவருடன் நடத்திய சில நிமிட உரையாடலிலிருந்து...

எடுத்ததுமே முன்னணி இடத்தைப் பிடிக்கிறது அவ்வளவு சாத்தியமில்லையே..?

நல்ல கதாபாத்திரம் அமைந்தால் போதும். எதுவும் இங்கு சாத்தியம்தான். லைஃப்ல எதிர்கொள்கிற எல்லாத் திருப்பங்களையும் சுமக்கும் ஒரு பெண்ணாக இந்தத் தொடர்ல பார்வதி இருக்கா. ஒட்டுமொத்த கவனமும் அவ மீதுதான் படருது. அதுதான் எனக்கு பாசிட்டிவ்வா அமைந்தது. இதுமாதிரி பவர்ஃபுல்லா முழு ஃபோகஸ் ஏற்று நடிக்கும் ரோல் தற்சமயம் மற்ற எந்த சீரியல்லயும் யாருக்கும் இல்லை. அப்படி ஒரு கிராஃப்ட் இது. அதனாலதான் நான் லக்கின்னு சொல்றேன்.

x