அந்த அவசியம் எனக்கு இல்லைடான்னு சொன்னேன்!- சிலிர்த்து வெடிக்கிறார் சின்மயி


‘‘சமீபத்தில் இயக்குநர் பிரேம்குமார் என்னை அழைத்து, ‘விஜய்சேதுபதி - த்ரிஷா காம்போவுல ‘96’னு ஒரு படம் பண்றேன். அதுல த்ரிஷாவுக்கு நீங்கதான் டப்பிங் பேசப்போறீங்க. கூடவே மொத்தப் பாட்டும் உங்க வாய்ஸ்லயே இருக்கப்போகுது. ஏன்னா, இந்தக் கதையோட ஓட்டத்துக்கு நாயகியோட குரல் ரொம்ப பலம். அதனால நீங்க முழு கதையையும் கேட்டுக்குங்க’ என்று சொன்னார். ஒரு பின்னணிப் பாடகிக்கு படத்தோட மொத்த கதையும் கேட்கும் சூழலும் வாய்ப்பும் இதுக்கு முன்ன யாருக்கும் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. நல்ல அனுபவம்தானேன்னு உடனே கதை கேட்க அமர்ந்துவிட்டேன்’’ புன்னகை ததும்பச் சொல்கிறார் பின்னணிப் பாடகி சின்மயி.

பின்னணிப் பாடகியாக 16 ஆண்டுகால பயணம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப் பாடல்கள் என தனது கிராஃப் உயர்ந்திருந்தாலும் சின்மயியின் சிம்ப்ளிசிட்டி நம்மை வியக்க வைக்கிறது ‘92.7 சென்னை பிக் எஃப்.எம்’ வானொலியின் ‘பிக் மேட்னி’ மறு ஒலிபரப்பு (ரீ-லான்ஞ்ச்) நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர் காமதேனுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

இப்போதெல்லாம் பாடகிகள் தனி ஆல்பம், மாஷ்-அப் பாடல் என பின்னி எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். உங்களுக்கு அதில் ஆர்வம் இல்லையா?

‘குரு’ படத்துல வர்ற ‘மையா மையா’ பாட்டை ஸ்டுடியோ கான்செப்ட்ல நான் பாட ஒரு ஆல்பமா உருவாக்கியிருக்கோம். ஆனாலும், இப்போ வர்ற இண்டிபென்டென்ட் ஆல்பம் மாதிரி பண்ணலாம்கிற ஆர்வம் எனக்கு இல்ல. அதுக்கு முதல் காரணம், அதிக அளவுல செலவு ஆகுது. இன்னொன்னு ஒவ்வொரு டெக்னீஷியனையும் ஃப்ரீயா வொர்க் பண்ணிக் கொடுங்கன்னு சொல்ற பழக்கமும் எனக்கு இல்ல. இப்போ வர்ற இந்த மாதிரி தனி ஆல்பம் எல்லாம் 90-களில் சுனிதா ராவ், லக்கி அலி, ஷாண் போன்ற பலரும் வெளியிட்டு தனித்த கவனம் ஈர்த்தார்கள். இடையில கொஞ்ச வருஷம் இல்லாம திரும்பவும் இப்ப வந்திருக்கு. அவ்வளவுதான்.

x