தமிழக மக்கள் எரிச்சலைத் தேர்தலில் காட்டுவார்கள்- விஜய் சேதுபதி விறு விறு!


அரசியல், சமூகப் பிரச்சினை, போராட்டம் எதுவாக இருந்தாலும் முகம் காட்டுவதிலும், கருத்துச் சொல்வதிலும் முன்வரிசையில் நிற்கிறார் விஜய் சேதுபதி. சென்னை சிறுமி கூட்டு பாலியல் சீண்டல் செய்யப்பட்டது குறித்து, “குற்றவாளிகளைக்
கொடூரமாக கொலை செய்தால்கூட போதாது. தண்டனை கடுமையா இருக்கணும். மற்றவங்களைப் பயமுறுத்தணும்” என்று சொன்னவர். ‘காமதேனு’ இதழுக்காக சினிமாவைத் தாண்டி சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பியபோதும், தடுமாற்றமில்லாமல் பொளேர் என்று பதிலளித்தார் விஜய் சேதுபதி.

‘ஜுங்கா’ பெரிய பட்ஜெட் படம். அதில் நீங்களே தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறீர்கள். ஏன் இந்த ரிஸ்க்?

எந்தவித சினிமா பின்னணி இல்லாமலே சினிமாவுக்கு வந்தவன் நான். தொடர்ச்சியாக பல்வேறு வாய்ப்புகள் வரும்போது, நம்மை நிலைநிறுத்திக்கொள்ள சில ரிஸ்க்குகளை எடுக்க வேண்டிய சூழல் வரும். அப்போது உங்களுக்கு வியாபாரம் இவ்வளவு தான், ஏன் முதல் போடுறீங்க என்று பலரும் பயமுறுத்துவார்கள். என்னைப்பற்றி அவர்கள் எடைபோட்டு வைத்திருப்பதை உடைக்க இப்படியெல்லாம் மாற வேண்டியதிருக்கு. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள், வெற்றியடைவதற்கென ஒரு பாதையைப் பின்பற்றினார்கள். அப்படி நானும் வெற்றிக்கென ஒரே பாதையை வகுக்க விரும்பவில்லை. வெற்றிக்கு 1000 வழிகள் இருக்கு.

நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற விஷயத்தில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் உங்களுடைய கருத்து என்ன?

x