இப்பவும் சின்னப் பெண் போலவே இருக்கிறார் லட்சுமிமேனன். ஆனால், பேச்சு அப்படியில்லை. சீக்கிரமாகவே நடிப்புத்துறைக்குள் வந்துவிட்டதாலோ என்னவோ, பழுத்த அனுபவசாலி போல இருக்கிறது பேச்சு. நீண்ட காலமாக தமிழ் திரையில் மிஸ்ஸானவரை ‘காமதேனு’ இதழுக்காகச் சந்தித்தேன்.
ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி..?
ஸ்கூல் படிக்கும்போதே நடிக்க வந்துட்டேன். ரொம்பக் குட்டிப்பொண்ணா இருக்கும்போதே நிறைய உழைச்சாச்சு. இப்ப கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சிருக்குது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, பாரம்பரிய நடனத்தில் டிப்ளமோ படிச்சிட்டு இருக்கேன். அதிலேயே பிஹெச்டி வரைக்கும் பண்ணணுங்கிறதுதான் என்னோட லட்சியம்.
அப்ப இனிமே உங்களைத் திரையில் பார்க்க முடியாதா?