“திரையில் என்னுடன் நெருக்கமாக இருக்கிறாயே, வெளியே தனியாக ஏன் நெருக்கமாக இருக்க முடியாது என்று சில ஹீரோக்கள் கேட்பார்கள். சில இயக்குநர்களே என்னை அழைத்திருக்கிறார்கள். அதை மறுத்ததால் பல படங்களை இழந்திருக்கிறேன். சமூகத்தின் பிரதிபலிப்பு திரைத்துறையிலும் இருக்கிறது. என்னிடம் எத்தனையோ திறமைகள் இருந்தும், இந்த ஒரே விஷயத்தைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். இதனால் பெரும் பாதிப்புக்குள்ளானேன்" என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் மல்லிகா ஷெராவத்.
டர்ட்டி பாலிடிக்ஸ்!
‘நடிகையர் திலகம்’ வெற்றி தெலுங்கில் கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டை எகிற வைத்திருக்கிறது. பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியே கீர்த்தியை அழைத்துப் பேசியிருப்பதுதான் அதன் உச்சம். தமிழ்ப் படத்துக்கான தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணியாவது ராஜமௌலி படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏற்கெனவே, என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் சாவித்திரி சம்பந்தப்பட்ட காட்சிகளில், இவரை நடிக்கவைக்க அணுகியிருக்கிறார்கள்.
அசத்தட்டும் ஆந்திரா சாவித்திரி!