கலக்குவேன் கலக்குவேன்... திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு...


"நான் மாறிட்டேன். இனிமேல் நேரம் தவறாமல் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்" என்ற சிம்புவின் பேச்சுவொர்க் அவுட்டாகிவிட்டது போல. ‘செக்கச் சிவந்த வானம்’ படப்பிடிப்பை முடித்த கையோடு, அடுத்த படத்துக்காகப் பல்வேறு இயக்குநர்கள் அவரைக் கதையுடன் அணுகி வருகிறார்கள். வெங்கட்பிரபு இயக்கும் படத்துக்கு அக்டோபரிலிருந்து தேதிகள் ஒதுக்கியுள்ள சிம்பு, அதற்கு முன்பாகவே மற்றொரு படத்தை முடித்துவிடவும் திட்டமிட்டுள்ளார். அந்தப் படத்தின் இயக்குநராகும் வாய்ப்பு கார்த்திக் நரேன் உள்ளிட்ட இளம் இயக்குநருக்கே என்கிறது கோலிவுட் பட்சி.

 கலக்குவேன் கலக்குவேன்... திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு...

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு ஒரு வித்தியாசமான பழக்கம். தான் பணிபுரிந்த படத்தின் காட்சிகளுக்குப் பின்னணி இசை மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடித்தவுடன், அதைப்பார்ப்பதே இல்லை. ரொம்ப அவசியம் என்றால்,சில காட்சிகள் மட்டும் பார்ப்பாராம். தான் பணிபுரிந்த படங்களின் காட்சிகளை எல்லாம் 5 நிமிடஷோ-ரீலாகமட்டுமே வைத்திருக்கிறார். ஒரு படம் புதிதாக ஒப்பந்த மானவுடன், தனது முந்தைய படத்தின் ஷோ- ரீல்கள் அனைத்தையும் மொத்தமாகப் பார்த்துவிடுவது இவருடைய பழக்கம்.

 கல்யாண சிடி மாதிரி டீல் பண்றாரே?!

x