‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்கள் தாமதமாவது ஏன், ரஜினியுடனானசந்திப்பில் நடந்தது என்ன, ‘என்னை அறிந்தால் 2’ எப்போது வெளிவரும் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு கடந்த வாரம் மனம் திறந்து பேசியிருந்தார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். இந்த வாரம் தன்னைச் சுற்றி நிலவும் சர்ச்சைகளுக்கு முதன் முதலாக பதிலளிக்கிறார்.
விக்ரமுடன் முதன்முறையாகப் பணிபுரிந்த அனுபவம் எப்படி?
விக்ரம் சார். ‘துருவ நட்சத்திரம்’ ஷுட்டிங் நடக்கும்போது, அவருக்கான காட்சிகள் இல்லை என்றாலும் கூடவே இருப்பார். ஒரு படத்தின் உருவாக்கத்தின்போது அனைத்துத் துறைகளிலும் நம்ம உழைப்பு இருக்கணும்னு நினைப்பார். ஷுட்டிங்கில் இருக்கும் அனைவரையும் உற்சாகப்படுத்துவார், எவ்வளவு கஷ்டமான காட்சி என்றாலும் ஒட்டுமொத்த ஷுட்டிங் ஸ்பாட்டையும் சந்தோஷ மனநிலையிலேயே விக்ரம் சார் வச்சிருப்பார். இது அவரிடம் நான் வியந்து பார்க்கும் குணம்.
விஜய்யுடனான ‘யோஹன்’ படம் மீண்டும் தொடங்க வாய்ப்பு உண்டா..?