‘‘இப்போ நான் தென்காசியில் இருக்கேன். விஜய்சேதுபதி - அஞ்சலி நடிக்கும் புதுப்படத்தோட ஷூட்டிங். உடனே, ‘இதுல உங்களுக்கு என்ன ரோல்?’னு கேட்டுடாதீங்க. இந்தப் படத்துக்கு அஞ்சலியோட காஸ்ட்யூம் டிசைனர் நான்தான்!’’ – மகேஸ்வரியைத் தொடர்பு கொண்டபோது சாதனைச் சிரிப்புடன் இப்படிப் பதில் சொன்னார். சின்னத்திரை தொகுப்பாளினி, நடிப்பு என வட்டமடித்துகொண்டிருக்கும் மகேஷ்வரிக்கு காஸ்ட்யூம் டிசைனிங் மீது இப்போது தீராத காதல். யுவன் சங்கர் ராஜாவின் ‘பியார் பிரேமா காதல்’ படத்தைத் தொடர்ந்து, அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி - அஞ்சலி நடிக்கும் புதிய படத்திலும் காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றி வருகிறார். அவரிடம் இன்னும் கொஞ்சம் பேசியதிலிருந்து...
ஏதோ, ஆசைக்காக வொர்க் பண்ணிட்டு பழையபடி தொகுப்பாளினியா சேனலுக்கு திரும்பிருவீங்கன்னு பார்த்தா... முழு நேர காஸ்ட்யூம் டிசைனராவே மாறிட்டீங்களே..?
மீடியா, சினிமான்னு இந்தப் பயணத்தை ஆரம்பிச்சு 13 வருஷத்தை ஓட்டியாச்சு. ஆங்கரிங், நடிப்புன்னு வரும்போது ‘ஷாட் ரெடி’ன்னா போவோம். முடிஞ்சதும் திரும்புவோம்; அவ்ளோதான். ஆனா, அதுக்குப் பின்னாடி இருக்குற டெக்னீஷியன்களோட டென்ஷன் எப்படி இருக்கும்னு தெரியாது. இப்போ நாமளும் ஒரு டெக்னீஷியனா நிக்கும்போதுதான் அது எவ்ளோ சேலஞ்சிங்கான வொர்க்னு புரியுது. நாள் முழுக்க ஸ்பாட்ல நிக்கிறதும், எத்தகைய சூழலிலும் பதற்றப்படாம வேலைகளைக் கவனிக்கிறதும் பெரிய விஷயம். ஆனாலும், அந்த டென்ஷன்லயும் சம்திங் டிஃபரென்ட் எனர்ஜி இருக்கேன்னு இதை விரும்பி எடுத்துக்கிட்டேன்.
அப்படியானால்... இனி நடிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பணிகள் எல்லாம்?