தீபாவளிக்கு வெளியாகும் ’சர்கார்’!


விஜயை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `சர்கார்’ தீபாவளிக்கு வெளியாகும் என்று உறுதிப்படுத்தியிருக்கிறது சன் பிக்சர்ஸ். செல்வராகவன் - சூர்யா இணைந்துள்ள‘என்.ஜி.கே’வும் தீபாவளி வெளியீடு என்கிறார்கள். இரண்டுமே அரசியல் சார்ந்த கதைக்களம் என்பது கூடுதல் விசேஷம்!

 இப்பவே நம்மாளுங்க விமர்சனம் எழுத ஆரம்பிச்சிடுவாங்களே?!

சஞ்சய் தத் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘சஞ்சு’ படத்தைத் தொடர்ந்து ‘முன்னாபாய் 3’ படத்தை இயக்கவுள்ளார் ராஜ்குமார் ஹிரானி. அதன் நாயகன் சஞ்சய் தத்! கையோடு மீண்டும் ஆமிர்கானுடன் இணைந்து, ‘3 இடியட்ஸ்’ இரண்டாம் பாகத்தையும் இயக்க முடிவு செய்திருக்கிறார் ஹிரானி.

நண்பன் 2 எடுப்பாரான்னு ஷங்கர் சாரையும் கேட்கணுமே!

x