அரசியே... அழகியே... அரக்கியே...


ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக இயக்குநர்கள் வரிசையில் நிற்க, ‘சஞ்சு’ (இந்தி) படத்தின் கவுரவ இசையமைப்பாளராகியிருக்கிறார் அவர். அப்படத்தின் இசையமைப்பாளர்களாக அமால் மாலிக், ரோஹன் ரோஹன், விக்ரம் மன்ட்ரோஸ் ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். ஆனால், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானிக்கு ஒரு பாடல் திருப்தி தரவே இல்லை. அதை வைத்தே படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில், படமாக்கப்பட்ட காட்சியமைப்புகளுக்கு ஒரு பாடல் உருவாக்கித் தருமாறு ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்க, அவரும் உடனடியாக முடித்துக் கொடுத்திருக்கிறார்.

ரொம்ப பெரிய மனசு சார் உங்களுக்கு...

மீண்டும் கௌதம் மேனன் - சிம்பு கூட்டணி இணைகிறது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 2-ம் பாகமாக உருவாகவுள்ள இப்படத்துக்கு ‘விண்ணைத்தாண்டி வருவேன்' எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். முதலில் மாதவன் நடிப்பதாக இருந்த இந்தப் படத்தில், சிம்புவை நடிக்கக் கேட்டிருக்கிறார் கௌதம் மேனன். ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இதை ஆரம்பிக்கலாம் என்று சிம்பு சொல்ல, படம் உறுதியாகிவிட்டது. இசை ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பு லைகா!

செகண்ட் இன்னிங்ஸ் சிறக்க வாழ்த்துகள்!

x