ரஜினியைக் கேள்விகேட்டதுதான் மக்களின் எழுச்சி!- மனம் திறக்கிறார் விஷால்!


தற்போதைய தமிழ்த் திரையுலகில் அதிகாரம் மிக்க நபர் என்றால் விஷால்தான். நடிகர் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எனப் பல முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் இவர்மீது சமீப காலமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள். ‘இரும்புத்திரை’ தெலுங்கு ரிலீஸை முடித்துவிட்டு ஆந்திராவிலிருந்து சென்னை திரும்பியவரை ‘காமதேனு’ இதழுக்காகச் சந்தித்துப் பேசினோம்.

திரைத் துறையினரின் 48 நாட்கள் வேலை நிறுத்தத்தால் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த நன்மை என்ன?

திரையரங்குகள் குறிப்பிட்ட 5 நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அது இருக்கக் கூடாது என்று விவாதம் நடந்தது. குறிப்பாக, சிறிய படங்கள் வெளியிட தேதி கிடைக்காமல் திணறிக்கொண்டிருந்தன. இதனை வரைமுறைப்படுத்தக் குழு அமைத்தோம். மாஸ்டரிங் செய்யப்பட்ட படத்தின் பிரின்ட்டை புரொஜெக்டர் வழியாகத் திரையிட வழங்கப்படும் (Visual Print Fee) விபிஎஃப் கட்டணத்துக்காக, ஹாலிவுட்டில் இருப்பதுபோல ‘சன்செட் க்ளாஸ்’ என்ற முறையைக் கொண்டுவந்திருக்கிறோம். அதுமட்டுமன்றி, தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தின் வசூல் குறித்து எந்தத் தெளிவும் இதுவரை இல்லை. ஆகையால் 100% டிக்கெட் கட்டணத்தைக் கணினிமயமாக்குவதற்காக ஒரு செயலி (ஆப்) தயாரிக்கும் முயற்சியும் தொடங்கிவிட்டது. இதெல்லாம் நன்மையில்லையா?

ஆனால், படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்களுக்கு இடையே சண்டையே மூண்டுவிட்டதே?

x