எஸ்.எஸ்.மியூசிக் சேனல் மூலம் அறிமுகமாகி, ‘திமிரு’ படத்தில் நடிப்பால் மிரட்டியவர் ஸ்ரேயா ரெட்டி. விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை மணமுடித்தவர். திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதைத் தவிர்த்தவர், ‘சில சமயங்களில்’, ‘அண்டாவ காணோம்’ படங்கள் மூலம் திரைக்குத் திரும்பியிருக்கிறார். ‘காமதேனு’வுக்காக அவரைச் சந்தித்தோம்.
‘அண்டாவ காணோம்’ எப்படி வந்திருக்கிறது... படம் எப்போது திரைக்கு வரும்?
எனக்கு இது ரொம்ப முக்கியமான படம். கிராமத்துப் பெண் வேடம் என்பதால் வசனம் பேசி, நடிப்பதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டேன். தேனி மக்கள் பேசும் தமிழ், கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. கோபம், காமெடி, அழுகை என்று நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம். எல்லாவற்றையும் சவாலாக எடுத்துக்கொண்டு நடித்தேன். தேனி யில் ஒன்றரை மாசம் தங்கியிருந்து நடிச்சது எல்லாம் மறக்கவே முடியாது. கிராமத்து மக்களுடனேயே தூங்கி எழுந்து, சாப்பிட்டு, பேசிப்பழகியது நடிப்புக்கு ரொம்ப உதவியா இருந்தது. இந்த வருஷம் படம் கண்டிப்பா ரிலீஸ் ஆகிடும்.
படத்தின் ஹீரோவே நீங்கள்தான் என்கிறார்களே?