``கதையை எங்கெங்கோ கொண்டு போயிருக்காங்க!'’-‘நடிகையர் திலகம்’ பற்றி சொல்கிறார் ‘நந்தினி’ பாட்டி!


சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘நந்தினி’ தொடரில் அண்ணபூரணி பாட்டியாக வந்து கலகலப்பு சேர்க்கிறார் சச்சு. சின்னத்திரை பேட்டிக்காக அவரைத் தொடர்பு கொண்டேன். ‘‘பூஜையில இருக்கேம்பா... 15 நிமிஷத்துல நானே லைன்ல வர்றேன்..?’’ என்றவர், சொன்ன மாதிரியே ஷார்ப்பாக பேட்டிக்குத் தயாரானார்.

கோயில், சாமி, பூஜை என ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட நீங்கள் ‘நந்தினி’ தொடரில், பகுத்தறிவு பகலவன் மாதிரியான கதாபாத்திரத்தில் வருகிறீர்களே..?

ரியல் லைஃப்ல இருந்து மொத்தமா மாறி அந்தக் கேரக்டருக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்கிறதுதானே நடிப்பு. அதுபடி பார்த்தா நான் எடுத்துக்கிட்ட இந்த நந்தினி பாட்டி அவதாரம் சரிதானே. ‘தாயுள்ளம்’ படத்துல மனோகர் ஹீரோ. ஜெமினி வில்லன். அதுவே ஒரு காலகட்டத்துல ஜெமினி ஹீரோவா நடித்த படத்துல மனோகர் வில்லன். இதெல்லாம் மாறி மாறி நடக்கும். அதே மாதிரி வியட்நாம் வீடு சுந்தரம் எடுத்த ‘கந்தர் அலங்காரம்’ படத்துல எம்.ஆர்.ராதா ஆன்மிக அவதாரம் எடுத்தார். ‘எந்த தைரியத்துல முடிவு பண்ணினாங்க?’ன்னு எனக்கே அப்ப ஆச்சரியமா இருந்துச்சு. அதுமாதிரிதான் எல்லாமும். நடிப்பு வேறு. நிஜ வாழ்க்கை வேறு. நாம எங்கே, யாரா இருக்கோம்னு புரிஞ்சு பண்ணினா போதும்.

சீரியல் நடிப்பை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களே, நந்தினியில் எப்படி..?

x